கவிஞரைப் பற்றி
K. வள்ளிநாயகம் (கவிஞர் மதுபாலிகா) அவர்களின் சொந்த ஊர் பாளயங்கோட்டை, நெல்லை மாவட்டம். பயின்றது பாரதி பயின்ற ம.தி.தா. இந்து கலாசாலை. 1968ல் திருச்சி தொலை தொடர்பு இலாகாவில் பணியில் சேர்ந்தார்.
அங்கே தொழிற்சங்கத்தில் மாவட்ட செயலராக பணியாற்றி 1986 முதல் சென்னையில் மாநிலச் செயலராகவும். 1998 முதல் 2011 வரை டெல்லியில் தொலை தொடர்பு மற்றும் BSNL ஊழியர்கள் FNTO சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலராக (Secretary General) சேவை செய்து இப்போது சென்னையில் வசித்து வருகிறார்.
8ம் வகுப்பு படிக்கும் போது முதல் கவிதை பிரசவம். தொடர்ந்து சமூகம், பக்தி, அரசியல் என பல்வேறு தளங்களிலும் கவிதை எழுதி, 1980 லிருந்து இன்று வரை புதிய கீதை, அஸ்வமேத யாகம், பூச்சொரியும் வானம், அம்மன் பாடல்கள், முருகன், பெருமாள் துதி மேலும் குங்குமப் பூக்கள், மதுபாலிகா கவிதைகள், வாழ்க்கையின் கவிதைகள் தற்போது கந்தர்வ கானம் (ஜன 2019) வரை நூல்களாக வெளியிட்டு தொடர்ந்து எழுதியும் வருகிறார். தொழிற்சங்க ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
About the Author
Born in Thirunelveli in 1948, Author K. Vallinayagam (Madhubalika) had his studies at MDT Hindu College, Thiruvelveli, served in Telecom Dept in Trichy & Chennai. He compiled his first poem collection in 1980. Latest poem collection is released in Jan 2019 (Gandarva Ganam)
In Telecom Union he was District State Secretary upto 1998, after that he became Secretary General of FNTO union in 1998 and served in that capacity at New Delhi upto 2011. Now settled at Chennai continuing his literary and Trade Union Service.